திரிபுரா மாநிலத்தில் 25ஆண்டு கால மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்திய பாஜக தேர்தலில் வெற்றி பெற்றது.
நேற்று திரிபுராவில் உள்ள பொலெனியா கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த லெனின் உருவச் சிலையை பாஜகவினர் அகற்றியுள்ளனர். இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் அராஜகமாக சிலை அகற்றப்பட்டது. இருகட்சி தொண்டர்களிடையே மோதல் நடந்து வருகிறது. பதவியேற்கும் முன்பே பழிவாங்கும் நடவடிக்கையை பாஜக தொடங்கிவிட்டதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
