Primary Menu

Top Menu

September 26, 18

பொய்களில் ஊறிப்போன பாஜக : ராகுல் கொந்தளிப்பு

பாஜகவின் அடித்தளமே பொய்களில் ஊறிப்போனது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல் முறையாக கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் பேசிய ராகுல், “2ஜி வழக்கில் உண்மை வெளிபட்டுள்ளது. எல்லோருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக சொன்ன பிரதமர் மோடியின் வாக்குறுதி என்ன ஆனது? மோடியின் நிர்வாகத் திறமைக்கு குஜராத் உதாரணம் என்பது முழுக்க முழக்க பொய்.” என்று கொந்தளித்தார்.

ர‌ஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு பற்றி மோடி வாயைத் திறக்காமல் இருப்பது ஏன் என்றும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவின் அடித்தளம் முதலே பொய்களால் ஊறிக்கிடக்கிறது என்று என்றும் ராகுல் விமர்சித்தார்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon