Primary Menu

Top Menu

July 19, 18

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு காதலரை அழைத்து வந்த ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததோடு மட்டுமல்லாது மேடையில் பாடல்களையும் கமலுடன் இணைந்து பாடி ரசிகர்களை மகிழ வைத்தார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் அந்த நிகழ்ச்சிக்கு தன் காதலர் மைக்கேல் கார்சேல்’லையும் உடன் அழைத்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் ஒன்றாக பிக்பாஸ் மேடையில் நின்றிருக்கும் போட்டோ தற்போது வெளியாகியுள்ளது. லண்டன் நடிகர் மைக்கேல் கார்சேலை காதலித்து வருகிறார். விரைவில் அவரை ஸ்ருதிஹாசன் திருமணம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகை ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடிக்க ஒப்புக் கொண்ட படம் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ‘சங்கமித்ரா’. திடீரென அந்தப் படத்திலிருந்து வெளியேறினார் ஸ்ருதி.

ஸ்ருதிஹாசன் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ‘துப்பாக்கி’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை மகேஷ் மஞ்ச்ரேக்கர் இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. திருமணம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் , ஸ்ருதி படத்தில் நடிக்கவிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

திரிஷாவின் அசைவுகள் எனக்கு பொறாமையை ஏற்படுத்தியது -ஸ்ரீரெட்டி

திரிஷாவை பார்த்துதான் தான் சினிமாவுக்கு...

Leave a Reply