Primary Menu

Top Menu

July 19, 18

ஆண்கள் எல்லை மீறியதாக கூறுகிறார் ‘பிக் பாஸ்’ போட்டியாளர் மமதி

கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்-2’ நிகழ்ச்சி குறித்து தான் தற்போது தமிழகம் முழுவதும் பேசப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டில் யார் இல்லாவிட்டால் நன்றாக இருக்கும் என்று போட்டியாளர்களிடம் கேட்டபோதே மமதியின் பெயரை கூறினார்கள். மமதி போலியாக நடிப்பதாக போட்டியாளர்கள் கமலிடம் புகார் தெரிவித்தனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார் மமதி சாரி.

இந்நிலையில் சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த மமதி ஒரு பரபரப்பு பேட்டியளித்துள்ளார். அவர் குறித்து என்னவென்றால், “பிக்பாஸ் வீட்டில் எஜமான், வேலைக்காரன் டாஸ்க் கொடுக்கப்பட்டபோது ஆண் போட்டியாளர்கள் பலர் என்னிடம் வேலைவாங்க வேண்டும் என மோசமாக எல்லைமீறி நடந்துகொண்டனர்” என கூறியுள்ளார்.

பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து வெளியானதற்குப் பிறகு வீட்டின் உள்ளே நிகழ்ந்ததைப் பற்றியும், ஒரு சில போட்டியாளர்கள் செய்த வெறுக்கத்தக்க விஷயங்களையும் குற்றச்சாட்டாக முன்வைக்கிறார் மமதி சாரி. குறிப்பாக எஜமான்கள் மற்றும் உதவியாளர்கள் டாஸ்க்கில் நடைபெற்ற பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாகப் பேசுகிறார். அதில் மமதி மற்றும் மும்தாஜ்க்கு ஆடைகளைத் துவைக்கும் பணி ஒதுக்கப்பட்டது குறித்து பரபரப்பான விஷயங்களை தெரிவிக்கிறார்.

எஜமான் மற்றும் உதவியாளர் டாஸ்க் என்னவென்றே அவர்கள் தெளிவாக புரிந்துகொள்ளவில்லை. பணியாட்களை சக்கை பிழிவது போலப் பிழிந்தால் தான் எஜமானர்கள் என்று நினைத்திருந்தனர், ஆனால் அவர்கள் படும் கஷ்டங்கள் குறித்து சிறிதளவும் யோசிக்கவில்லை என்று நேரடியாகக் குற்றம்சாட்டுகிறார். அத்துடன், எஜமானர்கள் என்றால் உதவியாளர்களுக்கு அதிக வேலை கொடுத்து அதிகாரமாக நடந்துகொள்வது தான் சரி என்பது போலவும் ஆண்கள் நடந்துகொண்டதாக தெரிவிக்கிறார். முறைகேடாக நடந்துகொள்ளும் போட்டியாளர்களை ஒரு முறை கூட கமல் ஹாசன் கண்டிக்கவில்லை. இந்த டாஸ்கினால் நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

 

திரிஷாவின் அசைவுகள் எனக்கு பொறாமையை ஏற்படுத்தியது -ஸ்ரீரெட்டி

திரிஷாவை பார்த்துதான் தான் சினிமாவுக்கு...

Leave a Reply