Primary Menu

Top Menu

July 16, 18

குடிபோதையில் வாகனம் ஓட்டிய பாரதிராஜாவின் மகன் மனோஜ்

பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் தனது பி.எம்.டபிள்யூ காரில் சென்று கொண்டிருந்தார்.

தாறுமாறாக வந்த காரை அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசார் மறித்து உள்ளே இருந்த மனோஜிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின் போது மனோஜ் குடிபோதையில் இருப்பது போல தெரிந்தது. சுவாச சோதனை உபகரணம் மூலமான சோதனை செய்து பார்த்தபோது அதிகளவில் மனோஜ் போதையில் இருப்பது உறுதியானது. இதனையடுத்து குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது பி.எம்.டபிள்யூ., காரைப் பறிமுதல் செய்துள்ள போலீசார் அபராதம் செலுத்திவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

வைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்!

சர்கார் படத்தில் நடிக்கும் யோகி பாபுவின்...

Leave a Reply