8 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டதற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி அசிபா. இவரை கொடூர கும்பல் ஒன்று பாலியல் வன்கொடுமை செய்து, கொன்றுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் அவள் உங்கள் மகளாக இருந்தால் தான் உங்களால் புரிந்து கொள்ள முடியுமா? அவள் என்னுடைய மகளாகவும் இருந்திருக்கலாம். அசிபாவை பாதுகாக்க தவறிய ஒரு மனிதனாக, தந்தையாக, ஒரு குடிமகனாக எனது கோபத்தை வெளிப்படுத்துகிறேன் என டுவிட்டரில் கருத்தை வெளியிட்டுள்ளார்.
டெல்லி நிர்பயா சம்பவத்திற்கு பிறகு, நிகழ்ந்த மிகப்பெரிய துக்கமாக அனுசரிக்கின்றனர்.
இதுபற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ள மல்யுத்த வீராங்கனை கீதா போகத், குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்க கடும் சட்டங்கள் இயற்ற அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாநில முதலமைச்சர் மெகபூபா முப்தி, விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
