Primary Menu

Top Menu

October 15, 18

அடடா… என்ன மாதிரியான நாட்டில் நாம் வாழ்கிறோம் !! – வரலட்சுமி சரத்குமார்

என்ன மாதிரியான நாட்டில் வாழ்கிறோம் வெட்கமாக இருக்கிறது என்று காஷ்மீர் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் பதிவிட்டுள்ளார்.

Image result for asifa killed 8 members

ஜம்மு- காஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கொலை செய்யப்பட்டார். இதற்கு பலரும் நீதி கேட்டு போராடி வருகின்றனர். சமூகவலைத்தளங்களில் ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

குற்றவாளியை காப்பாற்ற பலரும் துடிக்கின்றனர். இது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை சிதைத்த அந்த கொடூரனின் புகைப்படத்தை பதிவிட்டு பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

 

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கொந்தளித்துள்ளார். ஒரு அப்பாவி ஆத்மாவை சிதைத்து படுகொலை செய்திருக்கிறார்கள். வெட்கமாக இருக்கிறது. குற்றவாளியை பாதுகாக்கின்றனர் அவனை காக்க போராடுகின்றனர். இந்த மனிதனை காக்க சட்டமா? அடடா… என்ன மாதிரியான நாட்டில் நாம் வாழ்கிறோம்!!! என்று பதிவிட்டுள்ளார்.

விஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகி?

தியாகராஜன் குமாரராஜா சில வருட இடைவெளிக்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon