IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பிரசவித்து ஒரே நாளில் குழந்தையுடன் டிஸ்சார்ஜ் ஆனார் எமி ஜாக்சன்! அவங்களால முடியுது; நம்மால் ஏன் முடியல?

1


சுகப்பிரசவத்தில் குழந்தையைப் பெற்றெடுத்து ஒரே நாளில் குழந்தையுடன் டிஸ்சார்ஜ் ஆகியிருக்கிறார் நடிகை எமி ஜாக்சன். ஆங்கில மருத்துவத்தைப் பின்பற்றும் எமியால் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆக முடிகிறது. அதே மருத்துவ முறையைப் பின்பற்றும் நம்மால் ஏன் முடியவில்லை? என்று சமூகவலைதளங்களில் வைரலாக கேள்விகள் கிளம்பியுள்ளன.


மதராசப்பட்டிணம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் எமி ஜாக்சன். இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். இவருக்கு கடந்த 23ஆம் தேதி லண்டனில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் மறுநாள் மாலை குழந்தையுடன் எமி வீட்டிற்கு திரும்பினார். குழந்தை பிறந்ததும் தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோவுடன் போஸ்ட் போட்ட எமி, அடுத்த நாளே டிஸ்டார்ஜ் ஆனதையும் போஸ்ட் போட்டுள்ளார். குழந்தையை கையில் ஏந்தியபடி கண்ணாடி முன் நின்றபடி எடுக்கப்பட்ட ஒரு போட்டோவையும் அவர் பதிவிட்டுள்ளார்.


எமிக்கும், அவரது குழந்தைக்கும் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். அதே நேரம் பிரசிவித்து அடுத்த நாளே குழந்தையுடன் டிஸ்சார்ஜ் ஆகியிருக்கும் எமியைப் போல் நம் ஊரில் ஏன் அடுத்த நாளே டிஸ்சார்ஜ் ஆக முடியவில்லை என்ற கேள்வியையும் பலர் எழுப்பி வருகிறார்கள். எமி டிஸ்சார்ஜ் குறித்து ஒரு ரசிகர் எழுதியுள்ள பதிவில், இது நம் நாட்டில் சாத்தியமா என கேட்டால் கிடையாது. ஆனால்


லண்டனில் 99% சுகப்பிரசவம்தான். சிசேரியனெல்லாம் அங்கு அவ்வளவு எளிதில் செய்துவிட முடியாது. ஆனால் நம் இந்தியாவில் தலைகீழாக உள்ளது. மருந்து வியாபாரத்தில் நம் இந்தியாதான் தலைமை அலுவலகமாக இருகிறது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் கருவில் குழந்தை உருவானது முதல் வயதாகி கட்டையில் போகும்வரை மருந்து மாத்திரையில்தான் மனிதனை உலவ வைக்கின்றது, என்று குறிப்பிட்டுள்ளார்.


இன்னொரு ரசிகரோ ஒரு படி மேலே போய், நம் நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் பணத்துக்காக சுகப்பிரசவத்தையும், சிசேரியனாக மாற்றுகின்றனர். இந்த அவலம் அதிகமாக தனியார் மருத்துவமனைகளில் நடந்து வருகின்றது. மக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல பயப்படுகிறார்கள். ஏனென்றால் அங்கு போனால் தாய், சேய் இருவருக்கும் ஆபத்து வந்து விடுமோ என அச்சப்படுகிறார்கள். மேலும் குழந்தை திருட்டு, பிரசவத்தின் போது தாயின் இறப்பு என அரசு மருத்துவமனைகளில் நடந்து கொண்டிருக்கிறது.


இது மட்டும் அல்லாது போலி மருத்துவர்கள், செவிலியர்கள், என அதிகம் இருகின்றனர். அதனால் மக்கள் அரசு மருத்துவமனைகளை விட்டு எவ்வளவு பணம் செலவானலும் பரவா இல்லை என்று தனியார் மருத்துவமனைகளை நாடுகின்றனர். ஆனால் அங்கு சுகபிரசவம் என்றால் அதிக பணம் வசூலிக்க முடியாது என்பதற்காக சிசேரியன் செய்து விடுகின்றனர், என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.


மேலும், குழந்தை பிறந்ததும் இயற்கையாக இறைவன் கொடுக்கும் நோய் தடுப்பாற்றல் கொண்ட ஸ்டெம் செல்ஸ். இது குழந்தையின் உடலினுள் புகாமல் உடனே தொப்புள் கொடியை கிளிப் போட்டு முடக்கும் வித்தையெல்லாம் பிற நாடுகளில் கிடையாது. நம் இந்தியாவில் மட்டும் தான் நடக்கிறது. மேலும் தேவையற்ற தடுப்பூசிகளும் பிற நாடுகளில் கிடையாது.


தடுப்பூசியே போட்டுக்கொள்ளாமல் நோய் நொடியில்லாமல் வாழும் நரிக்குறவர்களும், பழங்குடியினரும் இதற்கு சாட்சியாய் இன்றும் உள்ளார்கள், என்றும் ஒரு ரசிகர் கூறியிருக்கிறார்.


கோவையில் பார்பிக்யூ நேஷன் இரண்டாவது கிளை துவக்கம்


#Amy Jackson #discharged #child