Primary Menu

Top Menu

July 20, 18

அஜித் வைத்திருக்கும் போன் மாடல்? வியந்துபோன பிருந்தா மாஸ்டர்

சிவா இயக்கத்தில் அஜித் விசுவாசம் என்ற படத்தில் நடிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் வேகமாக நடந்து வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்புகள் எங்கு நடக்கும் என்பது தெரியவில்லை. இந்த நேரத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைக்கும் பிருந்தா அவர்கள் விசுவாசம் படத்தில் 2 பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளாராம். ஒன்று மான்டெஜ் பாடலாகவும் மற்றொன்று பாடல் முழுவதும் நடனம் இருக்கும்படியான பாடல்களாம். அஜித் இதில் மற்றவர்களை கவரும் வண்ணம் பணியாற்றியுள்ளதாகவும், அவருடைய எளிமை கண்டு வியந்து போய்விட்டதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த டான்ஸ் மாஸ்டர் பிருந்தா தல அஜித்தின் எளிமை குறித்து கூறியுள்ளார். தற்போது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களே ஐபோன் முதல் விலையுயர்ந்த போன்கள் வைத்திருக்கும் நிலையில் அஜித் இன்னும் பழைய நோக்கியா மாடல் போனை வைத்திருப்பதாக தெரிவித்தார். தல அளவுக்கு ஒரு எளிமையான மனிதரை தான் இதுவரை வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என்று பிருந்தா கூறியுள்ளார்.

மேலும் தல அஜித் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்தில் தான் இரண்டு பாடல்களுக்கு நடனப்பயிற்சி செய்வதாகவும், அவர் ஒவ்வொரு ஸ்டெப்பையும் கவனமாக பார்த்து ஆடிய பின்னர், தான் ஆடியது சரிதானா? அல்லது இன்னொரு ஆடட்டுமா? என்று கேட்கும்போது தான் அசந்துவிட்டதாகவும் பிருந்தா கூறியுள்ளார்.

சாமி 2 பாடல்கள் வெளியீடு!

ஹரி இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு விக்ரம்...

Leave a Reply