Primary Menu

Top Menu

September 21, 18

அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தின் கதை தெரியுமா ?

அஜித்தின் விசுவாசம் படம் பற்றி கடந்த சில மாதங்களாக நிறைய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் சினிமா ஸ்ட்ரைக் காரணமாக படப்பிடிப்பு துவங்காமல் உள்ளது. தற்போது படத்தின் கதை குடும்பம் சம்பந்தப்பட்டதாகவும், காதல் காட்சிகள், காமெடி, ஆக்க்ஷன் காட்சிகள் என எல்லாம் படத்தில் இடம்பெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், இது ஒரு என்டர்டெயின்மென்ட் படம் என்றும், இதுவரை படத்திற்காக 2 பாடல்கள் தயாராகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related image

வீரம், வேதாளம் ஆகிய இரண்டு படங்களிலும் ஒரு நல்ல வலுவான பிளாஷ்பேக் காட்சிகள் இருந்தன. அதைபோல் அரைமணி நேர பிளாஷ்பேக் இந்த படத்திலும் இருப்பதாகவும், இதுதான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் கார் சேசிங் காட்சிகள் இருக்கும். இந்த சண்டைக்காட்சிக்காக வெளிநாட்டு கார் சேசிங் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Related image

அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ளது.

Comments

அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்

மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், ‘யோகன்’...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon