Primary Menu

Top Menu

September 22, 18

வியாழக்கிழமை விசுவாசம் ஃபர்ஸ்ட்லுக் – அஜித், சிவா சென்டிமென்ட்

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படத்தினை அடுத்து , சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் படம் ‘விசுவாசம்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த போஸ்டர் உங்களுக்காக

 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாலை 3.40 மணியளவில் வெளியிடப்பட்டது.   இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதுதொடர்பாக ஏராளமான ட்விட்களை அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருவதால், ட்விட்டரின் இந்திய அளவு ட்ரெண்டிங்கில் “விஸ்வாசம்ஃபர்ஸ்ட்லுக்” ட்ரெண்டாகியுள்ளது.

அஜித் நடித்து வரும் ஆக்‌ஷன் த்ரிலர் திரைப்படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தில் அஜித் இருவேறு தோற்றங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதலில் வயதான அஜித் தோற்றத்தை படம்பிடித்த படக்குழுவினர் தற்சமயம் அவரது ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் வரும் வயதான தோற்றத்தை எடுத்து வருவதாக தெரிகிறது. இப்படத்தில் நயன்தாரா, கோவை சரளா, விவேக், யோகி பாபு, தம்பிராமய்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் மூலம் முதன்முறையாக அஜித் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பினை இமான் பெற்றுள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இதனை தயாரித்து வருகிறது.

அஜித்தும், சிவாவும் தீவிரமான சாய்பாபா பக்தர்கள். சாய்பாபாவுக்கு உகந்த தினம் வியாழன். அதனால் இதற்கு முந்தைய சிவா படங்களின் முக்கிய அறிவிப்புகளையும் அவர் வியாழக்கிழமையே வெளியிட்டார். இப்போது அதே வியாழன் சென்டிமென்ட்டை கையில் எடுத்து, விஸ்வாசம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

Comments

நடிகரை ஹோட்டல் அறைக்கு வரச்சொன்ன மைனா படநடிகை!

அமலாபால், விதார்த் நடிப்பில் கடந்த 2010ல்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon