Primary Menu

Top Menu

April 24, 18

எய்ம்ஸ் மருத்துவமனையில் பிடிபட்ட போலி டாக்டர் !

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிடிபட்ட போலி டாக்டருக்கு இருக்கும் மருத்துவ அறிவு வியக்க வைத்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் போலி அடையாள அட்டையுடன் இளவயது மருத்துவர் சுற்றிவருவதாக மருத்துவர் சங்கத்தில் இருந்து எய்ம்ஸ் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அட்னன் குர்ரம் ((Adnan Khurram)) என்ற அந்த நபரின் புகைப்படமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து விசாரணை நடத்திய எய்ம்ஸ் நிர்வாகம் கடந்த சனிக்கிழமை அவரை போலீசாரிடம் ஒப்படைத்தது.

19 வயதான அட்னன் குர்ரம் கடந்த 5 மாதங்களாக ஜூனியர் மருத்துவர் என்று கூறிக்கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து சென்றதும், எந்த நேரமும் மருத்துவர் கோட் மற்றும் ஸ்டெதஸ்கோப்பை அணிந்துகொண்டு அனைத்துத் துறை மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறையின் அனைத்துத் துறை பணியாளர்களிடம் தொடர்ந்து பழகிவந்ததும் தெரியவந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெறும் மருத்துவர்களுக்கான கருத்தரங்கங்களில் கூடப் பங்கேற்றுள்ளார். ஐந்து மாதங்களாக எய்ம்ஸ் மருத்துவமனைக்குள் இவர் சுற்றி வந்தும் யாரும் கண்டுபிடிக்கவில்லை.

கடந்த சனிக்கிழமை, எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களுக்கான மாரத்தன் போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் ஓட வந்த குர்ராமிடம் சிலர் விசாரித்துள்ளனர். பதிலில் திருப்தியடையாத மருத்துவர்கள், அவரைப் பிடித்து  போலீஸாரிடம்  ஒப்படைத்தனர். தற்போது அட்நன் குர்ராம், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விசாரணையின் போது மருத்துவம் தொடர்பாக போலி டாக்டர் அட்னான் கூறிய தகவல்கள் போலீசாரையே வியக்க வைத்துள்ளது.

டெல்லி போலீஸார் கூறுகையில், ”குர்ராம் போலி டாக்டராகப் பணியாற்றியதற்கான பின்னணி தெரியவில்லை. டாக்டராக ஆசைப்பட்டதாகவும்,  அதனால் எய்ம்ஸ் மருத்துவமனையில் புகுந்து டாக்டர் போல வலம் வந்ததாகவும் கூறுகிறார். முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். ஃபேஸ்புக் பதிவில் பல புகைப்படங்களில் ஸ்டெதஸ்கோப்புடன் காணப்படுகிறார்.  மருந்துகள்குறித்து தெளிவான அறிவும் அவருக்கு இருக்கிறது. ஜூனியர் ரெஸிடென்ஸியல் டாக்டர் என்றும், இளநிலை மருத்துவம் படித்து வருவதாகவும் கூறி  எய்ம்ஸ் டாக்டர்களை ஏமாற்றியுள்ளார் ” என்று தெரிவித்துள்ளனர். பீகாரைச் சேர்ந்த குர்ராம், டெல்லி ஜமுனா நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

Leave a Reply