Primary Menu

Top Menu

September 26, 18

டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் 44 பேர் நீக்கம்!

அதிமுகவில் இருந்து டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள், 44 பேரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளனர்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட காரணத்தால், மதுரை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.சாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் துரை.தனராஜன், மகேஷ்வரி ரவி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வீரமாரி பாண்டியன் உட்பட, 44 பேர் அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்பட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும், நீக்கி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

இதேபோல புதுக்கோட்டை மாவட்ட அவைத் தலைவர் ரத்தின சபாபதி, வேலூர் மேற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் பாலசுப்பிரமணி ஆகியோரை, கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

நீதிமன்ற அவமதிப்பு – ஹெச்.ராஜா தரப்பு முறையீடு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதை...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon