Primary Menu

Top Menu

September 25, 18

பாலிவுட் நடிகை சோனம் கபூர் திருமணம் இன்று நடைபெற்றது

பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது காதலர் ஆனந்த் அஹுஜாவை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது காதலரான ஆனந்த் அஹுஜாவை பெற்றோர் சம்மதத்துடன் இன்று திருமணம் செய்து கொண்டார். மும்பையில் உள்ள அவரது ஆன்ட்டியின் பங்களாவில் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். பங்களாவில் அமைக்கப்பட்டிருந்த மேடையை பார்த்து அனைவரும் வியந்தனர். அந்த மேடைக்கான ரோஜா பூக்கள் ஹாலந்து மற்றும் ஸ்வீடனில் இருந்து வரவழைக்கப்பட்டதாம்.

 சீக்கிய முறை

சோனம், ஆனந்தின் திருமணம் சீக்கிய முறைப்படி நடந்தது. பங்களா வளாகத்தில் உள்ள கோவிலில் வைத்து அவர்கள் மாலையை மாற்றிக் கொண்டனர்.

திருமண விழாவில் ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி, குஷி மிகவும் அழகான உடையில் கலந்து கொண்டனர்.

குஷி

சோனம் கபூர் சிவப்பு நிற உடையில் மிகவும் அழகாக இருந்தார்.

சோனம், ஆனந்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் உள்ள தி லீலா ஹோட்டலில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Comments

குறும்படத்தில் நடிக்கவிருக்கும் விஜய் மகன் சஞ்சய்

விஜய் தான் நடித்த வேட்டைக்காரன் படத்தில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon