Primary Menu

Top Menu

August 18, 18

குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்… – நடிகை நிவேதா பெத்துராஜ்

சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நடிகர்-நடிகைகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர்.

நடிகை நிவேதா பெத்துராஜ் அண்மையில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமைகளை கண்டித்து பேசி செல்பி வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் உங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

“குழந்தைகளின் மீதான பாலியல் தொந்தரவுகள் அதிகமாக இருக்கிறது. இது பெரும்பாலும் நெருங்கிய உறவுகளால் தான் நேர்கிறது” என்றும் கூறியுள்ளார். மேலும், தானும் சிறுவயதில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானாதாகவும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இதோ அவருடைய வீடியோ பதிவு

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon