Primary Menu

Top Menu

July 19, 18

நடிகர் சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் பழனிசாமி

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்ட சபையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, மழை வெள்ளம் ஏற்படாமல் ரூபாய் 100 கோடியில் நீர் நிலைகள் தூர்வாரப்படும். மேலும், அண்ணா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியம் ரூபாய் 4 கோடி செலவில் புதுப்பிக்கப்படும். நடிகர் சிவாஜி கணேசன், ராமசாமி படையாட்சி ஆகியோரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.

 

சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நடிகர் பிரபு நன்றி தெரிவித்துள்ளார். சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பம் என்றும் பிரபு குறிப்பிட்டார்.முன்னதாக நடிகர் சிவாஜியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

டோல்கேட் தடுப்புகளை கையால் உடைத்து சென்ற எம் எல் ஏ!!

டோல்கேட் பணியாளர்கள் தாமதப்படுத்தியதால்...

Leave a Reply