Primary Menu

Top Menu

September 22, 18

தனுஷின் ‘வடசென்னை’ ட்ரைலர் குறித்த தகவல்

‘ஆடுகளம்’ படத்தினையடுத்து நடிகர் தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படம் ‘வடசென்னை’. இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடந்து வரும் நிலையில், தற்போது இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்தின் டிரைலர் வரும் ஜூலை மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் என நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். மேலும், இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்,. வேல்ராஜ் ஒளிப்பதிவில், ஜிபி வெங்கடேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இந்த படத்தை லைக்கா நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.
மூன்று பாகங்களாக உருவாக்கப்படுவதாக கூறப்படும் ‘வடசென்னை’ படம் தனுஷின் திரையுலக வாழ்வில் ஒரு முக்கியமான படம் என்று கூறப்படுகிறது.
Comments

அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்

மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், ‘யோகன்’...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon