Primary Menu

Top Menu

September 26, 18

நடிகர் தனுஷ் 35வது பிறந்தநாள் ஸ்பெஷல் !!

தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத சிறந்த நடிகர் தனுஷ் இன்று 35வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

மிக இளம் வயதிலேயே `துள்ளுவதோ இளமை’ படம் மூலம் சினிமா பயணத்தைத் தொடங்கியவர் தனுஷ்.  மெலிந்த தேகம், சோடா புட்டிக் கண்ணாடி என பெண்கள் ரசிக்க தயங்கும் கதாப்பாத்திரத்திற்கேற்ற உடல்மொழியில் ஒரு நடிகன். தமிழ்த் திரையுலகம் நகைத்தது.

இன்று நடிகராக, பாடகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக, இயக்குநராக தனது எல்லைகளை மட்டுமின்றி, தனது இருப்பையும் ஹாலிவுட் வரை மிகக் குறுகியகாலத்தில் விரிவு செய்திருக்கிறார்.

  1. வெங்கடேஷ் பிரபு என்கிற ஒரிஜினல் பெயரை மாற்றி வேறு பெயரை வைக்க நினைத்தார் அப்பா கஸ்தூரி ராஜா. இளையதிலகம் பிரபு, பிரபுதேவா என சிமிலரான பெயர்கள் சினிமாவில் பிரபலமாக இருந்ததே காரணம். அப்போது கமலின் `குருதிப்புனல்’ படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் பிரபு, ஆப்ரேஷன் தனுஷ் என்ற பெயரை கவனிக்க, அதிலிருந்து தனுஷ் என்கிற பெயரை தனது பெயராக தேர்வு செய்து கொண்டாராம்.

2. பள்ளிக் காலங்களில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்து செஃப் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தாராம் தனுஷ். திருப்தியான சாப்பாட்டை ஒருவருக்குக் கொடுத்து, வயிறாரா ருசித்து சாப்பிடுபவரின் கண்களில் தெரியும் சந்தோஷத்திற்கு இணையானது வேறு ஒன்றும் கிடையாது என்பாராம்.

3. நடிக்க வந்தது எதிர்பாராததாக இருந்தாலும், தயாரிப்பாளர் ஆனது காரணம் செல்வா ‘காதல் கொண்டேன்’ பட கதைக்கு தயாரிப்பாளர் தேடிய போது கதையை பலரும் நிராகரித்திருக்கிறார்கள். “நாம் உள்ள போனதும் புது ஆள்னு எல்லாம் பாக்காம கதைக்காக படம் பண்ணணும்” என அப்போது செல்வாவிடம் தனுஷ் கூறிய வார்த்தைகளே ‘வுண்டர்பார்’ நிறுவனத்தின் அஸ்திவாரம்.

4. ட்விட்டரில் 70 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலாயர்கள் பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் தனுஷ்தான்.

5. தனுஷ் வெஜிடேரியன் விரும்பி. அவ்வபோது முட்டை மட்டும் சேர்த்துக் கொள்வாராம். தனது உடல்வாகு கச்சிதமாக இருப்பதற்கு உணவு முறைதான் காரணம் என தீவிரமாய் நம்புபவர், “நொறுக்குத் தீனி, இனிப்புனு வெயிட் போடும் சமாச்சாரம் எல்லாம் இயல்பாவே எனக்குப் பிடிக்காது. அதனால வெயிட் போட்ருவேன்னு கவலையே கிடையாது. இதுதான் என் பிட்னஸ் சீக்ரெட்” என்பார்.

6. உலகம் முழுக்க ஹிட்டடித்த கொலவெறி பாடலை தனுஷ் எழுத எடுத்துக் கொண்டது ஆறு நிமிடங்கள். மொத்த பாடலும் அரை மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில் தயாரானதுதான். இணையத்தில் அதன் ஸ்க்ராட்ச் வெர்ஷனை யாரோ வெளியிட, வைரலாக பற்றிக் கொண்டது. அதன் பின் ஒரிஜினல் பாடலை வீடியோவாக பதிவு செய்து அதிகாரபூர்வமாக வெளியிட்டனர்.

7. கொலவெறி பாடலுக்கு பதிலாக ஒரு ஃபார்ஸ்ட் பீட் பாடலையும் போட்டு வைத்திருந்தார் அனிருத். அந்த ஃபார்ஸ்ட் பீட் பாடலை டீம் மொத்தமும் டிக் அடிக்க, தனுஷ் மட்டும் “இல்ல… நாம கொலவெறிய யூஸ் பண்ணுவோம்” என நின்றார். கடைசியில் தனுஷின் கணிப்பு வேற லெவல் ஹிட். அந்த ஃபார்ஸ்ட் பீட் பாடல் பின்பு சிவகார்த்திகேயனின் `எதிர்நீச்சல்’ படத்தில் பயன்படுத்தினார் அனிருத். அதுதான் சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல பாடல்.

8. தனுஷ், புரூஸ் லீயின் மிகப் பெரிய அன்பு கொண்டவர். தனது வுண்டர்பார் அலுவலகத்தில் கூட அவரது மேஜை மீது சிறிய ப்ரூஸ் லீ சிலை வைத்திருப்பார்.

9. தனது படங்களின் டப்பிங்கை மிக வேகமாக முடித்துக் கொடுத்துவிடுவார். சில படங்களுக்கெல்லாம், ஒரே நாளில் முடித்துக் கொடுத்திருக்கிறாராம். ஆனால் டப்பிங்கிற்கே எட்டு நாட்கள் செலவிட்ட படம் `ராஞ்சனா’.

10. பாலிவுட்டில் `ராஞ்சனா’ படத்துக்கு ஒப்பந்தமான போது தனுஷுக்கு சுத்தமாக இந்தி வராது. ஆனால், முதல் படத்துக்கே சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம் பேர் விருது வென்றார்.

11. “எல்லோரும் எனக்கு இந்தி பட வாய்ப்பு கிடைக்க காரணம் கொலவெறிடி பாடல்தான் என நினைக்கிறார்கள். உண்மையில் அந்த வாய்ப்பை எனக்குப் பெற்றுத்தந்தது, வெற்றிமாறானின் `ஆடுகளம்’. அந்த சமயம் யார் `இந்த முறை தேசிய விருது வென்றிருக்கிறார்?’ என ஆனந்த் எல்.ராய் அவரது உதவியாளரிடம் கேட்டிருக்கிறார். அவர் ஒத்த சொல்லால பாடலை காண்பித்து இவர்தான் எனக் காட்ட, ‘அட `ராஞ்சனா’ படத்திற்கு இப்படி ஒரு ஹீரோவைத் தானே தேடுகிறோம்’ என்று என் போல சாயலுள்ள பலரைத் தேர்வு செய்து பயிற்சி கொடுத்தனர். ஆனால், அவர்கள் யாரும் திருப்தி அளிக்காததால், `ஏன் இவரைப் போன்று ஒரு ஆள், இவரையே நடிக்க வைத்தால் என்ன’ என யோசித்து என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அவர்கள் ஒரு இயக்குநரை அணுகி என்னிடம் பேச சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அந்த இயக்குநர் என்னிடம் பேசாமலே, அவர் இந்தி படத்தில் எல்லாம் நடிக்க மாட்டார் என சொல்லிவிட்டார். பின்பு கொலவெறி பாடல் வெளிவந்த பிறகு பலருக்கும் என்னைத் தொடர்பு கொள்ள வசதி ஏற்பட்டது. பின்புதான் ஆனந்த் எல்.ராய் என்னிடம் பேசினார், ராஞ்சனா துவங்கியது…” என தன் பாலிவுட் என்ட்ரி பற்றி கூறுவார் தனுஷ்.

12. `சினிமா பாரடைசோ’ தமிழில் செல்வராகவனின் `7ஜி’ இரண்டும் தனுஷின் ஆல்டைம் ஃபேவரைட். இப்போதும் `7ஜி’யை மிஸ் பண்ணிட்டோமே என்ற வருத்தம் தனுஷுக்கு உண்டு.

13. ஸ்பெஷல் நிகழ்வுகள், திரைப்பட விழாக்கள் என வெளியிடங்களுக்கு தனுஷ் அணிந்து வரும் உடைகளுக்கு காஸ்ட்யூம் டிசைனர் யாரும் கிடையாது. வேஷ்டியோ, கோர்ட் சூட்டோ எல்லாமே தனுஷின் பெர்சனல் செலக்ஷன்தான்.

14. பல ஹிட் பாடல்களை எழுதியிருந்தாலும், தனுஷுக்கு தன்னைப் பாடலாசிரியராக அடையாளப்படுத்திக் கொள்வதில் கொஞ்சம் கூச்சம் உண்டு. ஆனால், தான் எழுதியதிலேயே விஐபி படத்தில் இடம்பெற்ற அம்மா அம்மா பாடல் மிக ஸ்பெஷல் என சொல்வார். காரணம் பாடல் வெளியாகி பல காலத்திற்குப் பிறகும் “எங்க அம்மா என் கூட இருந்த மாதிரி இருந்தது சார்… பாட்ட கேட்கும் போது கண்கலங்கிட்டேன்” எனப் பலரும் தனுஷிடம் சொன்னதுதான்.

15. சமூக வலைத்தளங்களில் பல விஷயங்களுக்காக உங்கள் பெயர் சர்ச்சையில் சிக்குகிறதே. அதை எல்லாம் எப்படி அமைதியாகக் கடந்து போகிறீர்கள்? எனக் கேட்டால், “நம்மை சுற்றி நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு. நமக்கு என்ன வேணும்னு நாமதான் தேர்ந்தெடுக்கணும். நான் நல்லதை மட்டும் பார்க்கறேன். இந்தப் பக்குவம்தான் என்னை அமைதியா வெச்சிருக்கு” என்பார்.

16. `யாரடி நீ மோகினி’ பட ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த தனுஷ், `பொல்லாதவன்’ வெளியாகி ஹிட்டானது தெரிந்ததும் வெற்றிமாறனுக்கு போன் செய்திருக்கிறார். போனில் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்க வெற்றிமாறனுக்கு ஒன்றும் புரியவில்லை. சத்தம் ஓய்ந்ததும் “சார் இன்னிக்கிதான் எனக்கு தீபாவளி” என சிரித்தபடி பேசியிருக்கிறார் தனுஷ். காரணம் பல தயாரிப்பாளர்கள் நிராகரித்தும் அந்த ஸ்க்ரிப்ட் மீது தனுஷ் வைத்திருந்த நம்பிக்கை மட்டும் மாறவில்லை. அதனாலேயே தனுஷுக்கு அந்தப் பட வெற்றியில் எல்லையில்லா மகிழ்ச்சி.

17. “இந்தப் படம் கேங்க்ஸ்டர் படங்களுக்கெல்லாம் ஒரு பென்ச் மார்க்கா இருக்கும்” எனப் பல இடங்களில் பதிவு செய்வது வெற்றிமாறனின் `வட சென்னை’ படத்தை.

18. `துள்ளுவதோ இளமை’ துவங்கி இப்போதைய வளர்ச்சி எப்படிப் பார்க்கறீங்க என்றால், “வளர்ச்சின்னு எடுத்துக்கறதான்னு தெரியல… ஓரளவு விஷயம் தெரிஞ்சு, என் வேலையை ரசிச்சுப் பண்றேன்” என்பார் தனுஷ்.

 

 

Comments

அட்டகாசத்துடன் வெளியானது விஸ்வாசம் படத்தின் ஓபனிங் பாடல்

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கான ஓப்பனிங்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon