ஆர்யா தனது வருங்கால மனைவியை தேர்வு செய்துவிட்டார்.
ஆர்யாவுக்கு பெண் பார்க்க கலர்ஸ் டிவியில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். 16 பெண்கள் ஆர்யாவை மணக்கும் ஆசையுடன் அந்த நிகழ்ச்சிக்கு வந்தனர்.
தற்போது சூசனா, அகாதா, சீதாலட்சுமி என்று மூன்று பெண்கள் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு வந்துள்ளனர். எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று இரவு நடக்கிறது. அதாவது நிகழ்ச்சிக்கு இன்று சுபம் போடுகிறார்கள்.
3 பெண்களும் மணப்பெண் போன்று அலங்காரம் செய்து வரிசையாக நிற்க ஆர்யா ஒரு பெண் அருகில் சென்று அவரை கட்டிப்பிடிக்கும் விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளனர். ப்ரொமோ வீடியோவில் ஆர்யா ஒரு பெண்ணை தேர்வு செய்தது போன்று காட்டியுள்ளனர்.
ஆர்யா,தன் வாழ்க்கைத் துணையாக வரப்போகின்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்து அவருக்கு இறுதி "டோக்கன் ஆப் லவ்" அளித்து திருமண செய்யப்போகிறார் "எங்க வீட்டு மாப்பிள்ளை" #GRAND_FINALE வில் இன்று இரவு 8:30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.#Arya #NipponPaintEVM India Gate Foods
Posted by Colors Tamil on 16 ಏಪ್ರಿಲ್ 2018
