Primary Menu

Top Menu

September 20, 18

16 பெண்கள் தேர்வு : யாரை திருமணம் செய்வார் ஆர்யா ?

ஆர்யா அடிக்கடி எதாவது செய்து “யார்யா” என்று அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துவிடுவார். கடந்த நவம்பர் மாதம் ஆர்யா ஜிம்மில் தனக்கு பெண்ணே கிடைக்கவில்லை என்று புலம்பிய வீடியோ வைரல் ஆனது. மேலும் அடுத்த நாள் தன் ட்விட்டரில் தன்னை திருமணம் செய்ய விரும்புவார்கள் இந்த இணையத்தில் தங்கள் போட்டோ அல்லது வீடியோ இந்த லிங்கில் சென்று அப்லோட் செய்யலாம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கலர்ஸ் தமிழ் சேனலில் ஆர்யா பங்கேற்கும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி திங்கள் – வெள்ளி இரவு 8.30க்கு ஒளிபரப்பாகும். இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க தான் ஆர்யா பெண்களை பதிவு செய்ய சொல்லியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

ஆர்யாவைக் கல்யாணம் செய்துக்க விருப்பம் என பல ஆயிரம் பெண்கள் பதிவு செய்தனராம். பதிவு செய்தவர்களை ஃபில்டர் செய்து இறுதியில் 16 பேர் தேர்வாகி உள்ளனராம். இவர்களுடன் ஆர்யா நடத்தகும் கிண்டல், கேலி, கடலை, கலகலப்பு தான் நிகழ்ச்சி. இறுதியில் தன் மனதிற்கு பிடித்த பெண்ணை ஆர்யா கண்டுகொள்வாரா, அவரை திருமணம் செய்வாரா என பொறுத்திருந்து நிகழ்ச்சியை பார்த்து தெரிந்தும் கொள்ளவேண்டியது தான்.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon