Primary Menu

Top Menu

October 21, 18

வைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்!

சர்கார் படத்தில் நடிக்கும் யோகி பாபுவின் புதிய கெட்-அப் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

 

இப்படத்தின் போஸ்டர் கடந்த ஜூன் மாதம் 21-ம் தேதி வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அரசியல் படமாக உருவாகிவரும் இப்படத்தில் ராதாரவி மற்றும் பழ.கருப்பையா இருவரும் அரசியல்வாதிகளாக நடிக்கின்றனர்.

 

மேலும், வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈ.வி.பி. பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

 

இதையடுத்து படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கேமரா ஃபில்டர் மூலம் யோகிபாபுவின் உருவத்தை பெண் கெட் அப் போல் மாற்றப்பட்டுள்ளது.

 

அந்த வீடியோவில் யோகி பாபுவின் கன்னத்தை ஒருவர் கிள்ளுவது போன்ற காட்சி இடம் பெறுகிறது . யோகி பாபுவை கிள்ளும் அந்த நபர் யார் என்று கண்டுபிடியுங்கள் என்று நடிகை வரலட்சுமி பதிவிட்டுள்ளார்.

 

விஜய்யை கலாய்த்த வரலட்சுமி?

சண்டக்கோழி2-வில் அதிரடி வில்லியாக நடித்த...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon