Primary Menu

Top Menu

September 25, 18

ஜியோமி போகோபோனின் முதல் ஸ்மார்ட்போன் வெளியீடு

ஜியோமியின் துணை பிராண்டான போகோபோன் தனது முதல் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. போகோ எப்1 என்ற பெயரில் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளி வந்துள்ளது.

 

ஜியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஒரு தனித்த இடத்தை பிடித்துள்ளது. குறுகிய காலத்திலேயே இந்த நிறுவனத்தின் ஸ்மார்போன்கள் விற்பனையில் சாதனைப்படைத்து வருகிறது.

 

இதன் தொடர்ச்சியாக ஜியோமி நிறுவனம் போகோபோன் என்ற துணை பிராண்டு மூலம் புதிய ஸ்மார்ட்போனை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

 

போகோ எப்1 ஸ்மார்ட்போன் பல்வேறு புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டீல் புளூ, கிராபைட் பிளாக், ரோசோ ரெட் போன்ற ஆகிய மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ளது.

 

அதுமட்டுமல்லாமல் போகோ எப்1 ஸ்மார்ட்போனில் சிறப்பு எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு எடிஷன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி நினைவக திறனை கொண்டிருக்கிறது. இந்த சிறப்பு எடிஷனின் விலை ரூ.29,999.

 

போகோ எப்1 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி நினைவக திறன் வசதி உள்ளது. இதன் விலை ரூ.20,999. 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி நினைவக திறன் வசதி கொண்ட போகோ எப்1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.23,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

போகோ எப்1 டாப் எண்ட் மாடலில் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி நினைவக திறன் வசதி உள்ளது. இதன் விலை ரூ.29,999. ஆகஸ்ட் 29-ம் தேதி இந்த புதிய ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

 

போகோ எப்1 சிறப்பு அம்சங்கள்

 

  • 6.18 இன்ச் முழு ஹெச்டி டிஸ்பிளே

 

  • 2.5டி கொரில்லா கிளாஸ்

 

  • ஸ்நாப்டிராகன் 845 பிராசசர்

 

  • 20 மெகா பிக்சல் செல்பி கேமரா

 

  • 12 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் இரண்டு பின்பக்க கேமரா

 

  • ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1

 

  • இரண்டு சிம் வசதி

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon