Primary Menu

Top Menu

September 21, 18

உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலை நொய்டாவில் திறப்பு

உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலை நொய்டாவில் திறக்கப்பட்டது. இதனை பிரதமர் மோடியும், தென்கொரியா அதிபர் மூன் ஜேயும் கூட்டாக திறந்து வைத்தனர்.

 

தென்கொரியாவை சேர்ந்த சாம்சங்க் நிறுவனம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆலை விரிவாக்கத்திற்காக ரூ. 4 ஆயிரத்து 915 கோடி ஒதுக்கியது.

 

தற்போது நொய்டாவில் செயல்படும் நிறுவனத்தில், ஆண்டிற்கு 67 மில்லியன் மொபைல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

 

எதிர்காலத்தில் ஆண்டிற்கு 120 மில்லியன் மொபைல்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, புதிய தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 35 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது இந்த ஆலை.

 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியா வந்துள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இது உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

 

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நேரடி கொள்முதல் முறையில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுகிறது. அரசுக்கு தேவையான பொருட்கள் உற்பத்தியாளர்களிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்படும்.

 

நேரடி கொள்முதல் முறையால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் பயனடைவர். இவ்வாறு அவர் பேசினார்.

 

Comments

இலவச அரிசி வழங்கும் பணியில் புதுச்சேரி குடிமை பொருள் சுறுசுறு

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon