Primary Menu

Top Menu

October 22, 18

டிராஃபிக் டென்சனா..? விரைவில் விற்பனைக்கு வரும் பறக்கும் கார்!

அமெரிக்காவில் பறக்கும் கார்களை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர ஒரு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

ஓபனர் என்ற அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்கஸ் லெங், கலிபோர்னியாவில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,

 

இதுவரை கனவாகவே இருந்த பறக்கும் கார் அடுத்த சில மாதங்களில் வானில் வலம் வருவதை காண முடியும் என்றார்.

 

மணிக்கு 62 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் காரில் ஒருவர் மட்டுமே அமர முடியும் என்ற அவர், மின்சாரத்தில் தானியங்கி முறையில் இயங்கும் காரில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 40 கிலோ மீட்டர் வரை செல்ல முடியும் என்றார்.

 

அரைமணி நேரத்தில் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும் என்ற அவர், அனைவரும் வாங்கும் வகையில் ஒரு எஸ்.யூ.வி ரக காரின் விலையிலேயே பறக்கும் காரும் விற்பனை செய்யப்படும் என்றார்.

 

காரை இயங்க பைலட் லைசன்ஸ் தேவை இல்லை என்ற அவர், மார்கஸ் லெங் நிறுவனம் அளிக்கும் பயிற்சி மட்டும் போதும் என்றார்.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon