Primary Menu

Top Menu

August 16, 18

விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்த அதிசய ரேடியோ சிக்னல்கள்!

விண்வெளியில் இருந்து முதல்முறையாக பூமிக்கு ரேடியோ சிக்னல்கள் வந்தடைந்துள்ளன.

 

கனடா நாட்டின் பிரிட்டிஸ் கொலம்பியா மலைத் தொடரில் ஓகனான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமி என்ற தொலை உணர்வு கருவியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ரேடியா அலைவரிசை சிக்னல் ஒன்று பதிவானது.

 

மிக குறுகிய கால அளவை கொண்ட அந்த சிக்னல், 700 மெகா ஹெர்ட்ஸ் என்ற மிக மெல்லிய அலைவரிசைக்கும் கீழாக இருந்தது.

 

இந்த பதிவை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், ரேடியோ சிக்னல், விண்வெளியில் பூமிக்கு வெளியே உள்ள ஏதோ ஒரு கிரகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட கருவியில் இருந்து வந்துள்ளதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

 

இதற்கு முன்னர் 2007-ஆம் ஆண்டில் இதே போன்று பதிவான ரேடியோ சிக்னலோடு, தற்போது பதிவான சிக்னலை ஆய்வு செய்துள்ள விஞ்ஞானிகள்,

 

தற்போது பதிவான சிக்னல் மூலம் அண்டவெளியில் எங்கோ ஓரிடத்தில் அறிவியலில் முன்னேறிய உயிரினம் உள்ளது என்பது உறுதி எனக் கூறியுள்ளனர்.

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon