Primary Menu

Top Menu

September 26, 18

இந்திய வளர்ச்சித் திட்டங்களுக்காக பிரிட்டன் நிதியுதவி

இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ள நிதியுதவி குறித்து பிரிட்டன் ஆளும் கட்சி எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரிட்டனின், சர்வதேச வளர்ச்சி துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், 2018 – 19ம் ஆண்டில் ரூ.4,75,64,40,000( 52 மில்லியன் பவுண்ட்), 2019 – 20 ம் ஆண்டில் ரூ. 4,20,76,20,000 (46 மில்லியன் பவுண்ட்) இந்தியாவுக்கு நிதியதவி செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தது.

 

இது தொடர்பாக ஆளும் கட்சி எம்.பி., டேவிட் டேவ்ஸ் கூறுகையில், இங்கிலாந்தின் நிதியுதவி இந்தியாவிற்கு தேவையில்லை. ஆனால், அந்நாட்டில் நிலவுக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்திற்கு நாம் உதவி செய்கிறோம் என்றார்.

 

பிலிப் டேவிஸ் என்ற எம்.பி., கூறுகையில், சொந்தமாக விண்வெளி திட்டம் வைத்திருக்கும் நாட்டிற்கு நாம் பணத்தை செலவு செய்கிறோம்.

 

மக்களின் வரிப்பணத்தை இவ்வாறு செலவழிப்பது சரியா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும். இது நியாயமானது அல்ல. முட்டாள் தனமானது எனக்கூறினார்.

 

ஆனால், இதன மறுத்துள்ள சர்வதேச வளர்ச்சி துறை இயக்குநரக அதிகாரி கூறுகையில், பிரிட்டனின் அயல்நாட்டு வளர்ச்சித்துறை இந்தியாவுக்கான உதவிகளை 2015ல் நிறுத்தி கொண்டது.

 

ஆனால், தற்போது பிரிட்டன் அளிக்கும் நிதியுதவி மூலம், அந்த நாடு, நீடித்த வளர்ச்சியை அடைந்து தகுந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கி சந்தைகளை உருவாகும்.

 

இதன் மூலம், அது மீண்டும் பிரிட்டனுக்கு தான் வருவாய் அளிக்கும். இது முற்றிலும் அரசின் திட்டம். இதில் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கப்படவில்லை என்றார்.

 

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon