Primary Menu

Top Menu

August 16, 18

ஜி.எஸ்.டி. வருவாய் அதிகரித்தால் மேலும் சில வரிபொருட்கள் குறையும் – பியூஸ் கோயல்

ஜி.எஸ்.டி மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்தால் மேலும் சில பொருட்களுக்கு வரி குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

 

மக்களவையில் ஜிஎஸ்டி திருத்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் பியூஸ் கோயல், பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 

கடந்த ஓராண்டில் மட்டும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் மூலம் 384 பொருட்களுக்கும் 68 சேவைகளுக்கும் வரி விதிப்பு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், 186 பொருட்கள், 96 சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பியூஸ் கோயல் கூறினார்.

 

நிதிப் பற்றாக்குறையை குறைப்பதற்கு அரசு நிர்ணயித்துள்ள இலக்கை எட்டும் வகையில் இதே நிலையில் வரி வசூலிக்கப்படும் என்றும், வரி மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரிக்கும் போது மேலும் பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

 

அப்போது பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, அரசின் முறையற்ற ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தமிழகத்தில் மட்டும் 50,000 சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon