Primary Menu

Top Menu

August 16, 18

அதிபர் மீதான தாக்குதல் நடந்த சதியின் பின்னணியில் கொலம்பியா

ட்ரோன் மூலம் தன்னை கொல்ல நடந்த சதியின் பின்னணியில் கொலம்பியா அரசு இருப்பதாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸக் மதுரோ குற்றம்சாட்டி உள்ளார். இதனை கொலம்பியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

 

தாக்குதல் தொடர்பாக நாட்டு மக்களுக்கு அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தம்மை கொலை செய்ய முயன்ற பின்னணியில் கொலம்பியா அதிபர் ஜூவான் மேனல் சான்டோஸ் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

 

ஆனால் அதிபர் மதுரோவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என கொலம்பிய அரசு மறுத்துள்ளது.

 

இதற்கிடையில் தாக்குதல் நடந்த இடத்தை ஆய்வு செய்த வெனிசுலா அதிகாரிகள், அதிபர் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெடித்தது ட்ரோன் குண்டுகள் இல்லை எனவும்,

அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட சிறிய தீ விபத்தில் சிலிண்டர்கள் தூக்கி வீசப்பட்டு, அவை வெடித்த போது சிதறிய துண்டுகள் எனவும் தெரிவித்துள்ளனர்.

 

அதிபர் நிகழ்ச்சியை படம்பிடித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள் எரிவாயு சிலிண்டரை ட்ரோன் என தவறாக நினைத்து விட்டதாகவும் கூறி உள்ளனர்.

 

அதிபரின் குற்றச்சாட்டுக்கு எதிராக உள்நாட்டு அதிகாரிகளின் அறிக்கை உள்ளதால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon