Primary Menu

Top Menu

October 22, 18

இந்தியாவில் விவோ ஆக்டிவ் 3 மியூசிக் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

கார்மின் நிறுவனத்தின் விவோஆக்டிவ் 3 மியூசிக் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

மியூசிக் மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச்-இல் அதிகபட்சம் 500 பாடல்களை பிரபல மியூசிக் ஸ்ட்ரீமிங் தளங்களில் இருந்து டவுன்லோடு செய்ய முடியும்.

 

விவோஆக்டிவ் 3 அறிமுகம் செய்யப்பட்ட போது வழங்கப்பட்ட ஃபிட்னஸ் அம்சம், கார்மின் பே கான்டாக்ட்லெஸ் பேமென்ட் உள்ளிட்டவை புதிய சாதனத்திலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

 

கார்மின் விவோஆக்டிவ் 3 சிறப்பம்சங்கள்:

 

– 1.2 இன்ச் 240×240 பிக்சல் ஃபுல்-கலர் கார்மின் க்ரோமா டிஸ்ப்ளே

– வாட்டர் ரெசிஸ்டன்ட் (5 ATM)

– ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோனுடன் வேலை செய்யும்

– ஸ்டெப் கவுன்ட்டர், மூவ் பார்

– ஆட்டோ கோல்

– ஸ்லீப் மானிட்டரிங், கலோரி உள்ளிட்ட உடல் அசைவுகளை டிராக் செய்யும் வசதி

– மியூசிக் ஸ்டோரேஜ்: அதிகபட்சம் 500 பாடல்களை பதிவு செய்யும் வசதி

– பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட ஜிபிஎஸ் மற்றும் 15 ஸ்போர்ட் செயலிகள்

– கார்மின் எலிவேட் ரிஸ்ட் இதய துடிப்பு மானிட்டர்

– பாரோமெட்ரிக் ஆல்டிமீட்டர், காம்பஸ், தெர்மோமீட்டர்

 

ஸ்மார்ட்வாட்ச் மோடில் ஏழு நாட்கள் பேக்கப் வழங்குவதோடு, ஜிபிஎஸ் மற்றும் மியூசிக் மோடில் 5 மணி நேர பேக்கப், மியூசிக் இல்லாமல் ஜிபிஎஸ் மோடில் 13 மணி நேர பேக்கப் வழங்கும் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

 

இந்தியாவில் விவோஆக்டிவ் 3 மியூசிக் விலை ரூ.25,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவோஆக்டிவ் 3 மியூசிக் பிளாக் சிலிகான் 20மில்லிமீட்டர் பேண்ட் உடன் வருகிறது.

 

கார்மின்ஸ்டோர், பேடிஎம் மால், அமேசான், ப்ளிப்கார்ட், ஹீலியோஸ் வாட்ச் ஸ்டோர் மற்றும் பல்வேறு விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon