Primary Menu

Top Menu

August 16, 18

உரிமை கோராமல் கவனிப்பாரற்று கிடக்கும் 15,166 கோடி ரூபாய் ?

இந்தியாவில் உள்ள காப்பீட்டு நிறுவனங்களில் 15,166 கோடி ரூபாய் , உரிமை கோராமல் கிடப்பதாக, காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி அமைப்பான ஐஆர்டிஏஐ கூறியுள்ளது.

 

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 2018 மார்ச் 31ம் தேதி கணக்கின்படி, பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியில் 10,509 கோடி ரூபாயும், தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் 4,657.45 கோடி ரூபாய் உரிமை கோரப்படாமல் உள்ளது.

 

பாலிசிதாரர்கள், வாரிசுதாரர்கள் அல்லது உறவினர்கள், தங்களுக்கு சேர வேண்டிய பணம் ஏதும் உள்ளதா என்பதை தேடி அறிந்து கொள்ளும் வசதியை , தங்களது இணைய தள பக்கத்தில் ஏற்படுத்துமாறு அனைத்து காப்பீட்டு நிறுவனங்களையும் ஐஆர்.டிஏஐ கேட்டு கொண்டுள்ளது.

 

தங்களுக்கு பணம் ஏதும் நிலுவையில் உள்ளதா என தேடுபவர்கள், பாலிசி எண், பாலிசிதாரரின் பான்கார்டு, அவரின் பெயர், பிறந்த தேதி, ஆதார் எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon