Primary Menu

Top Menu

September 25, 18

அமெரிக்கா எங்களுக்கு வழங்கியது நிதியுதவி அல்ல – பாகிஸ்தான்

அமெரிக்கா தங்களுக்கு வழங்கி வந்தது நிதியுதவி அல்ல என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

 

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு ஆண்டுதோறும் 300 மில்லியன் டாலர் வழங்கி வந்தது.

 

இந்த தொகை இந்திய ரூபாயின் மதிப்பில் 2 ஆயிரத்து 134 கோடியே 80 லட்சம் ரூபாய் ஆகும். ஆனால், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாரபட்சம் காட்டி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க அரசு, இந்த நிதியை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

 

அமெரிக்காவின் நடவடிக்கை குறித்துப் பதிலளித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். குரேஷி, 300 மில்லியன் டாலர் நிதி தங்களுக்கு உதவியாக வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

 

இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தப்பட்டது என்பதால், நிதியை தொடர்ந்து வழங்க வேண்டுமென கூறியுள்ளார்.

 

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, வரும் 5ஆம் தேதி பாகிஸ்தான் செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon