Primary Menu

Top Menu

September 22, 18

ஈரான் மீது தடை – நீதிமன்ற கருத்தை நிராகரித்த அமெரிக்கா!

அணு ஆயுதம் தொடர்பாக ஈரான் மீதான தடைகளை நீக்குவது குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற சர்வதேச நீதிமன்றத்தின் கருத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

 

ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா அந்த நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதனை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு தொடர்ந்தது.

 

இந்த வழக்கு நெதர்லாந்து நாட்டில் உள்ள தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஈரான் மீதான தடையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

 

ஆனால் இந்த வழக்கை விசாரிக்க சர்வதேச நீதிமன்றத்திற்கு உரிமையில்லை என்று கூறி நீதிபதிகளின் கருத்தை அமெரிக்கா நிராகரித்தது.

 

Comments

நடிகரை ஹோட்டல் அறைக்கு வரச்சொன்ன மைனா படநடிகை!

அமலாபால், விதார்த் நடிப்பில் கடந்த 2010ல்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon