Primary Menu

Top Menu

October 16, 18

மங்குட் சூறாவளியில் பிலிப்பைன்ஸ் , சீனாவில் பொதுமக்கள் பலி

பிலிப்பைன்சில் 65 பேரைப் பலிகொண்ட மங்குட் சூறாவளி சீனாவில் 4 பேரின் உயிரைப் பறித்துள்ளது.

 

ஃபிலிப்பைன்சின் ஒரு பகுதியைப் புரட்டிப் போட்ட மங்குட் சூறாவளி ஞாயிறன்று, ஹாங்காங், சீனாவைத் தாக்கியது.

 

பலத்த காற்றால் எராளமான மரங்கள் முறிந்ததோடு, கட்டுமானம் நடைபெற்று வந்த இடங்களில் சாளரங்களும் அதன் வேகத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் பிய்த்துக் கொண்டு போனது.

 

கடலும் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் கரையோரப் பகுதிகளுக்குள் நீர் புகுந்தது.

 

கனமழையால் ((Zhongshan)) பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்குள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 31 லட்சம் பேர் பாதுகாப்புடன் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

4 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon