Primary Menu

Top Menu

September 20, 18

இந்தியா , சீனாவிற்கான நிதியுதவி இல்லை – டிரம்ப்

அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தில் உள்ள நார்த் டகோடா பர்கோ நகரில் நிதிதிரட்டும் நிகழ்ச்சி நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்றார்.

 

அப்போது உலக வர்த்தக அமைப்பு (WTO), இந்தியா, சீனா ஆகிய நாடுகளைக் கடுமையாக விமர்சனம் செய்தார்.

 

உலக அளவில் சீனாவும், இந்தியாவும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய நாடுகளாக உருவாவதற்கு உலக வர்த்தக அமைப்புதான் (WTO) காரணம். இந்த அமைப்பைத்தான் குற்றம் சாட்டுவேன்.

 

இந்தியா, சீனாவை தவிர்த்து இன்னும் பிற நாடுகளையும் வளர்ந்து வரும் நாடுகள் என்ற பட்டியலில் வைத்திருக்கிறோம். ஆனால், சில நாடுகள் இன்னும் போதுமான வளர்ச்சி பெறவில்லை,

 

அப்படி இருந்தும் கூட அனைத்து வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளுக்கு நாம் மானியம் அளிக்கிறோம்.

 

இதை நினைத்துப் பார்த்தாலே வேடிக்கையாக இருக்கிறது. மற்ற சிறிய நாடுகள் வேண்டுமானால், வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் என்று சொல்லலாம். ஆனால், சீனாவும், இந்தியாவும் மானியத்தை வாங்கிக்கொண்டு நாங்களும் வளர்ந்து வரும் நாடுகள் என்று சொல்லிக்கொள்கின்றன.

 

இது வேடிக்கையாக இருக்கிறது, சீனாவும், இந்தியாவும் வளர்வதற்கு நாம்தான் மானியம் அளிக்கிறோம். இவர்கள் வளர நாம் ஏன் மானியம் அளிக்க வேண்டும். அனைத்து மானியத்தையும் நிறுத்த வேண்டும், விரைவில் நிறுத்துவோம் என்று பேசினார்.

 

உலகிலேயே ராணுவத்திற்காக அதிகமாக செலவிடும் நாடாக அமெரிக்காதான் உள்ளது. அவை அனைத்தும் பிற நாடுகளின் பாதுகாப்பிற்காகவே செலவு செய்கிறோம்.

 

அமெரிக்காவும் வளர்ந்து வரும் நாடுதானே, பிற நாடுகளுக்கு கொடுக்கும் மானியங்களை நிறுத்திவிட்டு மற்ற நாடுகளை விட நாம் வேகமாக வளரப் போகிறோம் என்றும் கூறினார்.

 

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடும் வர்த்தகப் போர் நிலவி வரும் நிலையில் சர்வதேச சந்தைகளில் நிலையற்ற சூழல் நிலவி வருகிறது.

 

சீனாவிற்கு கூடுதலாக 50 ஆயிரம் கோடி டாலர் வரி விதிக்கப்போவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், தற்போது இந்தியா மற்றும் சீனாவிற்கு ராணுவத்திற்கான மானியத்தை நிறுத்துவதாக அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

 

Comments

டிவி நடிகை நிலானி தற்கொலைக்கு முயற்சி மருத்துவமனையில் அனுமதி

நடிகை நிலானி, காந்தி லலித் தன்னை திருமணம்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon