Primary Menu

Top Menu

September 22, 18

டிரம்ப் முதலிடம்

சமூக வலைதளமான, ‘டுவிட்டரில்’ அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முதலிடத்தை பிடித்துள்ளார்.

 

சமூக வலைதளமான ‘டுவிட்டரில்’ அதிக நபர்களால் பின்தொரடப்படும் தலைவர்கள் குறித்து, சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது; அதன் விபரம்:

 

அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்கள் பட்டியலில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தை பிடித்துள்ளார்.

 

டிரம்ப்பை டுவிட்டரில் 5.2 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இந்த பட்டியலில், 4.75 கோடி பேருடன், போப் பிரான்சிஸ், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

 

பிரதமர் நரேந்திர மோடி, பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்; இவரை, 4.3 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.

 

எனினும் ‘ரீ டுவிட்’கள் மட்டும் பெற்றதில், வளைகுடா நாடான, சவுதி அரேபிய இளவரசர், சல்மான், அமெரிக்க அதிபரை விட முன்னணியில் உள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon