Primary Menu

Top Menu

September 26, 18

மலைக்க வைக்கும் பெட்ரோல் , டீசல் விலை அதிகரிப்பு !

இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

 

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டது.

 

இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது.

 

தொடர்ந்து மாற்றம் சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

 

இந்நிலையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.81.75ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.74.41ஆகவும் உள்ளன.

 

இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

 

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon