Primary Menu

Top Menu

October 20, 18

பள்ளிகூடம் ஒரு வணிகமா

என்ன தவம் செய்தேன் தமிழனாக பிறந்ததற்கு
என்று….. நம் பாரதி முழக்கமிட ஒரு காரணம் உண்டு !

ஏனனில் நம் பலந்தமிலர்களும் ,இபொழுது உள்ள தமிழர்களும் இந்த உலகிற்கு ஆற்றிய தொண்டுகள் ஏராளம்

 

ஒவ்வறு துறைகளிலும் அவர்களின் பங்கு மறக முடியாத சுவடுகளை இடுச் சென்றுள்ளது ..

 

அப்படி பல துறைகளில் நம் முன்னோர்கள் சிறப்பாக செயலாற்றிய துறைகளில் ஒன்று கல்வித்துறை

 

அம்ம்….. அது உண்மை தான்

கல்வியை பற்றிய பல குறிப்புகளையும் ,பல பதிவுகளையும் அந்த காலத்திலும் சரி, இந்த காலத்திலும் சரி நம் அறிஜர்கள் எழுதிய எழுத்துகள் ஏராளம்
வாழ்ந்த , வாழ்கின்ற நம் அறிஜர்களின் எழுத்துக்களையும் , கருத்துக்களையும் ஏற்று பெருமை கொள்கின்ற நம் மனது அதை செயல் படுத்த தவறியது தான் உண்மை!!!

 

“கல்வியே அழியச் செல்வம் “ என்ற பழமொழியை நாம் தவறாக புரிந்து கொண்டோமோ என்னவோ “ கல்வியை “ ஒரு செல்வமாகவே பார்க்க தொடங்கிவிட்டனர் இபோதைய மக்கள்…
ஆம் .. சற்று சிந்தித்து பாருங்கள் “ கல்வியை ஒரு வணிக நோக்கம் கொண்டே செயல் படுத்தி வருகின்றோம் “

பொருட்களை தரம் பிரிப்பது போலவே கல்வியையும் தரம் பிரிக்கத் தொடங்கிவிட்டோம்

 

அதாவது
*ஆங்கில வழி பள்ளியை உயர்ந்த
*தனியார் தமிழ் வழி பள்ளியை நடுத்தர
மற்றும்
*அரசு வழிப் பள்ளியை தாழ்ந்த

 

போன்ற மூன்று வகையான பிரிவுகளை பிரித்து , ஒன்றும் அறியாத சின்னஞ்சிறு நெஞ்ஜகளில் புகுதிவிடோம்

எவர் குழந்தை எந்த பிரிவில் சென்று பயில வேண்டும் என்று அவர்களின் பொருளாதார நிலையே முடிவு செய்ய வேண்டிய நிலைக்கு கொண்டு வந்துவிட்டோம்

 

ஒன்றும் அறியாத இளம் பிஞ்சுகளின் மனதில் உயர்ந்தவன் , மற்றும் தாழ்ந்தவன் போன்ற என்னகளை ஆழமாக விதைத்து விட்ட நாம் வளர்ந்த பின்பும் அவன் உள்ளங்களில் “ பிரிவு பாகுபாடு” போன்ற என்னகளே கிளை விரித்து வளர்கின்றது

 

தெளிந்த சிந்தனையுடன் வளர வேண்டிய சின்னஞ்சிறு நெஞ்ஜகளில் பாகுபாடு என்ற வேலியை கொண்டு அடைத்து வேடிக்கை பார்த்து மகிழ்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்

நம் கல்வி முறையையும் , அதை கற்பிக்கும் முறையையும் தவறு என்று என்னுள் தோன்றவில்லை

அதை கற்க , பொருளாதாரம் என்ற தடை அணை கற்களாக இருப்பது தான் தவறு

 

ஒரு குழந்தைக்கு “ தாய் “ எப்படி கடமை பட்டவளோ
அதுபோல

“வாழ்பவர்கள்” எதிர் காலத்தில் வாழ வர இருபவர்களுக்கு கடமைப்பட்டவர்கள்
நம் எதிர்கால குழந்தைகளுக்கு பணத்தை வாங்கி கொண்டு கல்வி அளிப்பது என்பது ஒரு தாய் தன் குழந்தைக்கு பணத்தை பெற்றுக்கொண்டு பால் அளிபதற்கு சமம் …

 

சற்று சிந்தியுகள் இது இரண்டும் ஒரே அர்த்தம் என்பது புலப்படும்
திறமையின் அடிப்படையில் தான் கல்வி இருக்க வேண்டுமே தவிர பணத்தின் அடிப்படையில் அல்ல !!!

 

நேற்று நான் படித்த ஒரு செய்தி என் மனதை அழமாக தாக்கி என் கண் விழிகளை கலங்கடித்தது…..

 

—-(அதில் தன் அண்ணன் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக தன்னையே தியாகம் செய்தது அந்த சிறு உள்ளம்

கரணம் அவன் தந்தை வேலை இழந்த காரணதினால் இரு குழந்தையையும் படிக்கச் வைக்க முடியாத நிலை…

 

கரணம்….. பணம்!!!

 

தனியார் கம்பெனியில் கை நிறைய சம்பாதித்த அவன் தந்தை தான் இரு மகன்களையும் ஆங்கில வழிக் பள்ளியில் சேர்த்து பாக்க வைத்தார்

சிறு விபத்தினால் உடல் நிலை சரி இல்லாத காரணத்தினால் வேலையை தொடரமுடியவில்லை ….

 

வேலை இல்லாத நிலையினால் அன்றாட வாழ்கைக்கே கஷ்டப்படும் அவர்கள் பணம் திங்கும் ஆங்கில பள்ளியில் தன் இரு மகன்களின் படிப்பை தொடர முடியும் ?
பள்ளியில் பீஸ் கட்ட வற்புடுதினர்கள்

 

பணம் கட்ட முடியாத காரணத்தினால் சக மாணவர்கள் கேலி செய்தார்கள்
வீட்டில் ஒரு பையனை மட்டும் படிக்கச் வைக்க வேண்டிய நிலை அதுவும் அரசு பள்ளியில் !!
இளையவனை அரசு பள்ளியில் படிக்கச் ஏற்பாடு செய்தார்கள்
அதனால் “மாற்று சான்றிதழை” ஆங்கில வழி பள்ளியிலிருந்து பெற சென்றார்கள்

 

அனால் அந்த பள்ளி பணத்தை கொடுத்தால்தான்” சான்றிதல்” வழங்க முடியும் என்று கறாராக நடந்து கொண்டது …

அவமானம் தாங்க முடியாமல் பெற்றோர் கலங்குவதை பார்த்த அந்த சிறுவன் அண்ணனை படிக்கச் வையுகள் நன் போகிறேன் என்று அந்த பிஞ்சு நெஞ்சம் தூக்கிட்டு கொண்டது)—-

 

பொது இடம் என்று பார்க்காமல் என் கண்கள் கலங்கியது அந்த செய்தியாய் கண்டு ..

 

*இதில் இருந்து தெரிகின்றது அந்த ‘ பள்ளி ‘படிப்புக்கும் மாணவன் நலத்திற்கும் முக்கிய துவம் கொடுக்கவில்லை என்று …

 

*இது மாதிரியான பள்ளியில் இருந்து நாம் கல்வியை எப்படி எதிர் பார்க்க முடியும்?

 

*படிப்பிற்கும், மாணவன் நலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காதது ஒரு பள்ளியா ??

 

*படிப்பிற்காக குழந்தையை அனுபுகின்றோமா அல்லது பணத்தை மட்டும் வளங்குவதர்க்காகவா ???

 

*அந்த பிஞ்சு குழந்தையின் வாழ்க்கையை உங்கள் பணம் எனும் ஆயுதத்தால் கொன்றுவிடேர்கள் !!

 

*ஒருவனை கதியால் குத்தி குத்தி கொன்றால் தான் கொலையா?
இதற்கு தற்கொலை என்று பெயர் சூட்ட பழகிவிட்டீர்கள்

 

*படிக்கும் குழந்தைகள் தன் தோழன் பணம் செலுத்தவில்லை என்பதற்காக ‘கேலி’ செய்யும் நிலையை ஏற்படுத்திவிட்டது அந்த பள்ளிகள் ….

 

இதைத் தான் அந்த பள்ளிகள் மாணவர்களுக்கு கற்றுத் தருகிறதா ?

 

*வணிக நோக்கம் கொண்டே செயல் படுகின்றது சில பள்ளிகள்
செயல்படுவதால் மாணவர்கள் நலனில் அக்கறை இல்லை …..

 

திறமையை பார்த்துதான் “கல்வி தரம்” அமைய வேண்டுமே தவிர
பணத்தை பார்த்து அல்ல

 

பணம் சம்பாரிக்க ஆயிரம் துறைகள் உள்ளது ,

கல்வி எனும் புனிததுறையை பணம் சம்பாரிக்கும் துறையாக மாற்றிவிடதிர்கள்

 

மகிழ்ச்சியை தவறவிடாதீர்கள்?

படித்து முடித்தால் மகிழ்ச்சியாக...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon