Primary Menu

Top Menu

May 21, 18

நடிகை தன்யாவிற்கு மர்மநபர் கொலை மிரட்டல்

நடிகை தன்யாவிற்கு மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் போன் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

 

’18.5.2009’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. இதில் கதாநாயகியாக தன்யா ரபியா பானு நடித்து வருகிறார்.

 

இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் கதாநாயகிக்கு மர்ம நபர் ஒருவர் போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் செய்த நடிகை தன்யா, மர்ம நபர் ஒருவர் தனக்கு நள்ளிரவு 1 மணிக்கு போன் செய்து ஆபாச வார்த்தைகளால் பேசியதாகவும், தன்னை கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியதாகவும் கூறி இருக்கிறார்.

 

மேலும் தனக்கு வந்த தொலைபேசி அழைப்பால் நானும் எனது தாயாரும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பயத்தோடு வாழ்ந்து வருவதாகவும் அவரது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

 

‘18.5.2009’ இப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், நடிகை தன்யாவிற்கு மர்ம நபர் போன் செய்து கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Partha

In4 Network Author

கீரிஸ் நகரின் ஆளூநரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்

கிரீஸின் இரண்டாவது பெரிய நகரமான தசலோனிகி...

Leave a Reply