Primary Menu

Top Menu

September 26, 18

இந்திய பாட்டை முணுமுணுத்த பாகிஸ்தான் பெண் ஊழியர் மீது நடவடிக்கை

இந்திய பாட்டை முணுமுணுத்த பாகிஸ்தான் விமானப்படை பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

பாக்., விமானப் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர், பாக்., தேசிய கொடியுடன் இந்தியாவின் பஞ்சாபி பாட்டு ஒன்றிற்கு உதட்டசைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

 

இந்நிலையில், நடத்தை விதிகளை மீறியதற்காக, அப்பெண் ஊழியரின் சேவையில், இரண்டு ஆண்டு சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதுபோல் சர்ச்சை நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் அவர் எச்சரிக்கப்பட்டார்.

 

தங்கள் ஊழியர்கள் சமூக வலைதளங்களில் எந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது எனவும் விமானப் பாதுகாப்புப் படை நிர்வாகம் எச்சரித்துள்ளது.

 

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon