Primary Menu

Top Menu

October 16, 18

கல்வித்துறையின் புதிய முயற்சி – யூடியூப் மூலம் பாடங்கள் கற்பித்தல்

யூடியூப் மூலம் பாடங்களை கற்பிக்கும் பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சிக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

நீட், ஜே.இ.இ. JEE உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு 11ஆம் வகுப்பு பாடங்களில் இருந்து 50 விழுக்காடு கேள்விகள் கேட்கப்படுகின்றன.

 

இந்த வகுப்பிற்கான பாடத்திட்டங்கள் 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடப்பு ஆண்டில் தான் மாற்றப்பட்டுள்ளன.

 

எனவே மாணவர்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக, பள்ளிக் கல்வித்துறை புதிய முயற்சியை கையில் எடுத்தது. இந்த முயற்சி தான் “யூடியூப் டியூசன்” என மாணவர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

 

மனப்பாட முறையை ஒழித்து, பாடத்தை எளிமையாக புரிந்து கொள்ள வைப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இதன்படி,

 

வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவது போன்று, 11ஆம் வகுப்பு பாடங்களின் காணொலிகள் தயாரிக்கப்பட்டு, யூடியூபில் கடந்த 4 மாதங்களாக அன்றாடம் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

 

TN SCERT என்ற யூடியூப் தளத்தில் அனைத்து பாடங்களின் காணொலிகளும் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

 

துறை சார்ந்த சிறந்த பேராசிரியர்கள், புதிய பாடப் புத்தகங்களை வடிவமைத்தவர்கள் ஆகியோர் மூலம் இந்த காணொலிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

 

மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் விதமாக எளிமையான விளக்கங்களுடன் ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.

 

மாணவர்களின் பின்னூட்டங்கள் கவனிக்கப்பட்டு அதற்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த சேனலை தற்போது வரை 80 ஆயிரம் பேர் Subscribe செய்துள்ளனர். ஒரு கோடியே 20 லட்சம் முறை வீடியோக்கள் பார்க்கப்பட்டுள்ளன.

 

வகுப்பறைகளில் ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்க தயங்குவோர், டியூசன் செல்ல முடியாதவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இத்திட்டம் பயனுள்ள வகையில் இருப்பதாக ஆதரவு பெருகியுள்ளது.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon