Primary Menu

Top Menu

September 21, 18

சசிதரூர் மனநல மருத்துவமனையில் தான் சேர்க்க வேண்டும் – பா.ஜ.க. தலைவர்

சசிதரூர் கூறிய ‘ஹிந்து பாகிஸ்தான்’ கருத்துக்கு அவரை மனநல மருத்துவமனையில் தான் சேர்க்க வேண்டும் என பா.ஜ., தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் பேசுகையில்,

 

2019 பார்லிமென்ட் தேர்தலில் மீண்டும் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் இந்திய நாடு, ‘ஹிந்து பாகிஸ்தான்’ என மாறிவிடும் என கூறியிருந்தார். அவரது இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் இக்கருத்து குறித்து சசிதரூரை, பா.ஜ., தலைவர் சுப்பிரமணியன் சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

அவர் தெரிவித்ததாவது: சசி தரூர் மீது பிரதமர் மோடி இரக்கம் காட்ட வேண்டும். சசி தரூருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது; அவரை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.

 

அவர் அளவுக்கு அதிகமாக எதையோ சாப்பிட்டு விட்டார் போல. அவரது பேச்சு மற்றும் கருத்துகள் ஏமாற்றத்தின் வெளிப்பாடுகள்.

 

ஹிந்து பாகிஸ்தான் என்பதற்கு என்ன அர்த்தம்? அவர் பாகிஸ்தானிற்கு எதிரானவரா? பாகிஸ்தானில் அவருக்கு நிறைய பெண் தோழிகள் உள்ளனர்.

 

அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் ஐ.எஸ்., அமைப்பின் உளவாளிகள் என குற்றம் சாட்டினார்.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon