Primary Menu

Top Menu

September 22, 18

ஆப்பிள்-1 ரக கம்ப்யூட்டர் 2.1 கோடிக்கு ஏலம்!!

ஆப்பிள் நிறுவனம் முதன் முதலில் தயாரித்த ஆப்பிள்-1 ரக கம்ப்யூட்டர் ஒன்று, 2.1 கோடி ரூபாய் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆப்பிள் நிறுவனர்களான ஸ்டீவ் ஜாப்சும், ஸ்டீவ் வோஸ்னியாக்கும் வடிவமைத்து தயாரித்த முதல் கணினி ஆப்பிள்-1 வரிசை கணினி எனப்படுகிறது.

 

உலகின் முதல் கணினி விற்பனையகங்களில் ஒன்றான கலிஃபோர்னியாவை சேர்ந்த பைட் ஷாப் (Byte Shop) மூலம் 1976ஆம் ஆண்டு இந்த ரக கணினிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

 

இந்நிலையில், ஆப்பிள்-1 ரகத்தை சேர்ந்த கணினி ஒன்று RR Auctions என்ற ஏல நிறுவனத்தின் இணைய தளத்தின் மூலம் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

 

முழுமையாக செயல்படும் நிலையில் உள்ள இந்த கணினி 2.1 கோடி ரூபாய் வரை ஏலம் போகும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.

 

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon