Primary Menu

Top Menu

September 22, 18

பவளப் பாறைகளை பாதுகாக்க ரோபோ நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகம்

பவளப்பாறைகளைக் காக்க ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்கலைக்கழக வல்லுநர்கள் ரோபோ நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

 

பவளப்பாறைகள் அமைந்துள்ள பகுதிகளில் நட்சத்திர மீன்கள் கூட்டம் நடமாடுவதால், பவளப்பாறைகள் அழியும் அபாயம் உள்ளது.

 

நட்சத்திர மீன்கள் வெளியிடும் ஒரு வகையான ரசாயனத்தால், பவளப்பாறைகள் சேதமுற்று அழியும் நிலை ஏற்படுவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

 

எனவே, நட்சத்திர மீன்களை வேட்டையாட ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் ரோபோ நீர்மூழ்கிக்கப்பலை வடிவமைத்துள்ளனர்.

 

கடலில் நட்சத்திர மீன்கள் திரியும் பவளப்பாறை பரப்பில் இந்த ரோபோக்கள் ரோந்து செல்லும்.

 

8 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் பேட்டரியுடன் இந்த ரோபோ நீர்மூழ்கிக் கப்பல் பணியாற்றும்.

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon