Primary Menu

Top Menu

October 21, 18

பொது இடங்களில் பெண்களை ஆபாச படம் எடுப்பதாக தென்கொரிய மக்கள் புகார்

தென்கொரியாவில், ரகசிய கேமிராக்கள் மூலம் பெண்களை ஆபாச படம் எடுத்து, பரவ விடும் போக்கிற்கு, எதிராக அந்நாட்டு பெண்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

 

கழிவறைகள், ரயில்கள், மற்றும் பள்ளிகள், அலுவலகங்களில், மகளிருக்கான பிரத்யேக அறைகளில், ரகசிய கேமிராக்களை பதித்து வைத்து, ஆடை மாற்றுதல் உள்ளிட்ட தருணங்களில், பெண்களை ஆபாசமாக படம் பிடித்து, அதனை இணையத்தில் பதிவேற்றி, சமூக விரோதிகள் பரப்பி வருகின்றனர்.

 

இதனை காணும் குடும்பத்தினர் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாவதோடு, தங்களுக்கு பெரும் பதட்டத்தையும், மன நெருக்கடியையும், இந்த ஆபாச படங்கள் உருவாக்கியிருப்பதாக தென்கொரிய பெண்கள் ஆற்றாமையுடன் தெரிவிக்கின்றனர்.

 

சமூக விரோதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்த மே மாதம் தொடங்கி, மாதந்தோறும் பெருந்திரள் போராட்டத்தை தென்கொரிய பெண்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

 

இந்த வகையில், கடந்த மாதம், தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற பெருந்திரள் போராட்டத்தில், 55 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டதாக, அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியிருக்கின்றனர்.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon