Primary Menu

Top Menu

October 21, 18

10 நாடுகளின் உதவியுடன் உலகின் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் தொடக்கம்

இந்திய உள்ளிட்ட பத்து நாடுகளின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

 

அந்நாட்டின் கார்நார்வோனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்னாப்பிரிக்க துணை அதிபர் டேவிட் மேபூசா டெலஸ்கோப் பணிகளை தொடங்கி வைத்தார்.

 

வான்வெளியில் தமது பூமி இயங்கும் அண்டத்தை போன்றே பல்வேறு அண்ட வெளிகளையும் துல்லியமாக படம் பிடிக்க புதிய டெலஸ்கோப் உதவும் என்றும்,

 

இதன் மூலம் அண்டவெளி குறித்த இதுவரை அறியாத செய்திகளை அறிய முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

 

இந்தியா, கனடா, இத்தாலி, நியூசிலாந்து, சீனா, ஸ்பெயின், சுவீடன், நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இந்த பணிக்கான நிதி உதவியை அளித்துள்ளன.

 

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon