Primary Menu

Top Menu

September 25, 18

சமூக அக்கறை

நமக்குள் சுயநலம்,

அதனுள் துணை, வீடு, பெற்றோர்,குழந்தைகள்,
உற்றோர், உறவினர், நண்பர்கள் என்று ஒரு குழாம்..

 

அதைத்தாண்டி வெளிவட்டம் முழுவதற்கும் பொதுநலம்; சுற்று சூழல், மின்சாரம், நீர், காற்று, வசதி வாய்ப்பு என்ற பொது விஷயத்தில் பொதிந்துள்ள சுயநலம், அதனால் வரும் பொதுநலம்,

 

அதனுடன் கூடி வருவது அமைதி, நம்பிக்கை, கூட்டு முறை, தர்மம், நீதி, நல்லது கெட்டது என எத்தனையோ – இத்தனையும் நோக்கியே நம் தினப்பயணம்…

 

உள்வட்டத்தையும் வெளிவட்டத்தையும் இணைக்கும் கூறுகள் அரசியல், அரசாங்கம், காவல், நீதித்துறை மற்றும் அலுவல், தொழில் என்று ஆயிரமாயிரம் பின்னல்கள்…

 

ஒன்று வரையறுக்கப்பட்டால் அதனைச்சார்ந்த மற்றொன்றும் நெறிப்படவேண்டும். நடைமுறைகள், உறவுகள், உணர்வுகள், எதிர்பார்ப்புகள், சிக்கல்கள், திணறல்கள், தடுப்புகள், தவிர்ப்புகள், தவிப்புகள் – இவை தரும் ஏமாற்றங்கள் தான் அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம்.

 

எல்லாம் தெரிந்தும் என்னை அது பாதிக்காதவரை எனக்கென்ன, எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் – என்று இருப்பதுவும் இன்னொரு சுயநலம்..

 

நாம் எதிர்நோக்கும் எல்லாமும் கிடைக்க நடக்க இருக்க முடியாமல் போகும் காரணங்கள் காரணிகள் அடையாளம் கண்டு கொள்வது இப்பொழுது எளிதாகி விட்டது. சமூக அக்கறை,

 

அதன் தகவல் பரிவர்த்தனை, தெளிவு, உணர்வு எல்லாம் எடுத்து இயம்பும் முறைமை – எல்லாம் இப்பொழுது வெளிக் கொணரப்படுகிறது –

 

அது அது தெரிய வேண்டிய நேரத்தில் உடனுக்குடனே, சமூக வலைத்தளங்கள் மற்றும் சாதனங்கள் மூலம் எல்லோரும் அறிந்து கொள்ள வசதிகள் முழுமையாக பெருகி விட்டன, நகரங்களில்;;; இன்னும் சில வருடங்களில் மூலைமுடுக்குகளிலும்…

 

ஆனால் அரசியல் பொறுப்பற்று நடப்பதுவும், அரசாங்கம் அரசியல்வாதியின் கைப்பிடியில் செயல்படுவதும், காவல்துறையின் விருப்புவெறுப்புகளும் விதிமீறலும், நீதித்துறையின் தாமதமும் இயலாமையும் ஏனோ தானோ என்றவொரு செயல்பாடும் நம் சமூகத்தின் கொடுமைகள் –

 

அவற்றால் ஏற்படும் சில நேரங்களில் சில மனிதர்களுக்கு – அதிலும் நல்லவர்களுக்கு, நடக்கும் போது தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் போவது தான் சகித்துக்கொள்ள முடியாத கொடூரங்கள்…

 

ஏகோபித்த மக்களின் கூட்டுச்சதியில் அரசியல் சதிராட்டம் சுயலாபங்களுக்காக முழுமையாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது.. நல்லவர்களை அடையாளம் காண முடியவில்லை, நல்லவர்களையும் கூட்டு சேர்த்துக்கொண்டு கெட்டவர்கள் ராஜாங்கம் நடத்துவதை ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன,

 

அதனால் என்ன பிரயோஜனம். அதிலும் பணம் கொடுத்து செய்திகள் பிரசுரமாவது இன்னும் கேவலம்.. ஊழல் இங்கே முழு வளர்ச்சி பெற்று விட்டது. பொருளாதார வளர்ச்சி என்பது அரை வயிறு கால் வயிறு என்று மெதுவாக ஜெனித்திருக்கிறது.

 

அரசியல்வாதிகளின் அரசாள்பவர்களின் சுரண்டல்களால் கெட்டவர்களுக்கு எல்லா சலுகைகளையும் இந்த சமூகம் அளித்துக்கொண்டிருக்கிறது, அவன் நல்லவன் என்று நம்பி, அவன் பணக்காரன் என்பதால்.

 

ஏழைகளைப்பொறுத்தவரை பணக்காரன் என்றாலே ஏதோ கெட்ட வழியில் பெற்ற வருமானம் / செல்வம் என்பது மிகவும் தெளிவாக நம்பப்படுகிறது;

 

அப்படி அவன் நம்பவில்லையென்றால் அது பொய் என்றே, அவன் உழைக்காத அல்லது உழைக்கமுடியாத காரணத்தால் அறிவுறுத்தப்படுகிறான்.

 

பணம் மட்டுமே இந்த சமூகத்தில் பகடைக்காய்; படைத்தவன் அழைப்புகளில் வாழ்க்கை பந்தாடப்படுகிறது.மற்றவர்கள் எல்லோரும் வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்.

 

எங்கே இருக்கிறது நமக்கு சமூக அக்கறை?

 

Comments

கல்யாண கனவு

அனைவரும் பூஜாவை அலங்கரிக்க தொடங்கினர்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon