Primary Menu

Top Menu

September 26, 18

சிம்புவிற்கு ஜோடியாக பிரபல மாடல் அழகி டயானா!

செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக டயானா எரப்பா நடித்துள்ளார். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் செக்கச் சிவந்த வானம் படத்தில் அருண் விஜய், அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ,

 

செப்டம்பர் மாதம் 28ம் தேதி படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.

 

அதில் வரதனாக அரவிந்த்சாமியும், ரசூலாக விஜய்சேதுபதியும், தியாகுவாக அருண் விஜய்யும், எத்தியாக சிம்புவும் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

தற்போது வெளியான புதிய போஸ்டரில் சிம்புவுக்கு ஜோடியாக டயானா எரப்பா நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. அவர் சாயா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் படக்குழு ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது.

 

Comments

தேவர் மகன்–2 படத்தை இயக்க கமல்ஹாசன் முடிவு?

நடிகர் கமல்ஹாசனும் தேவர் மகன் படத்தின்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon