Primary Menu

Top Menu

September 22, 18

கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் புவி வெப்பத்தின் விளைவு – விஞ்ஞானிகள் தகவல்

கேரள வெள்ளத்தை கருத்தில் கொண்டு பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

கேரளாவில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவு பெய்த அடைமழையால், ஏறக்குறைய 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரள வெள்ள பாதிப்பை வைத்து வானிலை மாற்ற ஆய்வு வல்லுநர்கள் பல அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

 

“1950 – 2017 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் பெய்யும் கனமழையின் அளவு 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் 69,000 பேர் பலியாகியுள்ளனர்.

 

1.7 கோடி பேரின் வீடுகள் நாசமாகியுள்ளனர்.” என்று மும்பையில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ராக்சி மேத்யூ கால் கூறுகிறார்.

 

வானிலை மாற்றப் பாதிப்புகளை பற்றி ஆய்வு செய்துவரும் ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானி கிரா வின்க், புவி வெப்பமயமாதலின் விளைவாகவே கேரளாவில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்.

 

மேலும், “புவி வெப்பநிலை 1 டிகிரி செல்ஷியஸ் கூடியதன் விளைவுதான் இவ்வளவும். மாசுபாடு அதிகரித்துக்கொண்டே இருந்தால், விளைவு மேலும் ஆபத்தாகும்.” எனவும் தெரிவித்துள்ளார்.

 

Comments

நடிகரை ஹோட்டல் அறைக்கு வரச்சொன்ன மைனா படநடிகை!

அமலாபால், விதார்த் நடிப்பில் கடந்த 2010ல்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon