Primary Menu

Top Menu

May 21, 18

துணிவிருந்தால் காவல்துறை என்னைக் கைது செய்யட்டும் – எஸ்.வி சேகர்

போலீஸாரால் தேடப்படும் எஸ்.வி.சேகரை விழா ஒன்றில் சந்தித்தேன். ஆனால் அவரை போலீஸிடம் பிடித்துக் கொடுப்பது என் வேலையில்லை என்று மத்துய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 

போலீசாரால் தேடப்பட்டு எஸ்.வி.சேகரை விழா ஒன்றில் சந்தித்தது உண்மைதான். விழாவொன்றில் கலந்துகொண்டபோது அவர் வெளியில் வந்தார். அப்போது அவரை சந்தித்து பேசினேன். எஸ்.வி. சேகரை கைது செய்வது தமிழக போலீசாரின் வேலைதானே தவிர, அது என் வேலையல்ல. ஒருவேளை அப்படி நான்தான் பிடிக்கவேண்டும் என்றால், எனக்கு டி.ஜி.பி. பதவி கொடுங்கள் என கிண்டலாக பதிலளித்தார். மேலும், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தமிழகத்திற்கு விமோசனம் வேண்டும் என்று நினைக்கிறார். அந்த விமோசனத்திற்காக என்னனென்ன வாய்ப்புகள் உண்டோ அதை அவர் பார்த்துக்கொள்ள முடியும். அதில் தவறு எதுவும் கிடையாது. தமிழகத்தில் பாஜக கூட்டணிக்காக ஏங்கி கொண்டிருக்கவில்லை. ரஜினியுடன் கூட்டணியா? என்பது குறித்து தேர்தல் நேரத்தில் தெரிய வரும்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய எஸ்.வி சேகர்,

தான் எங்கும் ஓடிச்சென்று ஒளியவில்லை என்றும், துணிவிருந்தால் காவல்துறை என்னைக் கைது செய்யட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாஜகவைச் சேர்ந்தவர் என்பதாலும், தமிழக அரசின் தலைமை செயலாளர் பதவியில் தனது உறவினர் இருப்பதன் பின்னணியையும் பயன்படுத்தி எஸ்.வி சேகர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து வருவதாக பத்திரிகையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

கீரிஸ் நகரின் ஆளூநரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்

கிரீஸின் இரண்டாவது பெரிய நகரமான தசலோனிகி...

Leave a Reply