Primary Menu

Top Menu

September 26, 18

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.

 

காலையில் வர்த்தக நேர தொடக்கத்தில் மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 100 புள்ளிகள் உயர்ந்து 38 ஆயிரத்து 989 புள்ளிகள் என்ற இதுவரை இல்லாத உச்சத்தில் இருந்தது.

 

வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 173 புள்ளிகள் சரிந்து 38 ஆயிரத்து 722 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 46 புள்ளிகள் சரிந்து 11 ஆயிரத்து 691 புள்ளிகளில் நிறைவடைந்தது.

 

ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல் பங்கு விலை உயர்ந்த நிலையில், ரிலையன்ஸ்,பவர்கிரிட், எஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலை சரிவடைந்தது.

 

இதனிடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதன்கிழமை 70 ரூபாய் 51 காசுகள் என்ற இதுவரை இல்லாத சரிவை சந்தித்துள்ளது.

 

கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர், ஈரான் மீதான பொருளாதார தடை போன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாக கூறப்படுகிறது.

 

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon